முக்கியச் செய்திகள் தமிழகம்

ரயில் நிலையத்தில் பெண் போலீசை கத்தியால் குத்திய மர்ம நபர்

மின்சார ரயிலில் பெண்களுக்கான பெட்டியில் ஏற முயன்ற மர்ம நபரை, பாதுகாப்பு பணியில் இருந்த, ரயில்வே பாதுகாப்புபடை பெண் காவலர் தடுத்த போது, ஆத்திரத்தில் கத்தியால் கழுத்தில் குத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை கீழ்பாக்கம் அருகே இருக்கும் மேடவாக்கம் டேங்க் ரோட்டில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர், 29 வயதான ஆசிர்வா. இவர் இரயில்வே பாதுகாப்பு படை காவலராக பணியாற்றி வருகிறார். மாலை 4 மணிமுதல், நள்ளிரவு வரை பாதுகாப்பு பணியில் இருப்பது வழக்கம். சம்பவத்தன்று இரவு, சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து , செங்கல்பட்டு நோக்கி செல்லும் மின்சார ரயில் புறப்பட தயாராக இருந்தது. மின்சார ரயிலில் பெண்கள் பயணம் செய்யும் பெட்டி அருகே ரயில்வே பாதுகாப்பு படை காவலர் ஆசீர்வா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இரயில் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, பெண்கள் பயணம் செய்யும் பெட்டிக்குள்ள மர்ம நபர் ஒருவர் ஏறியுள்ளார். இதைப்பார்த்த பெண் காவலர் ஆசீர்வா, அவரை தடுத்து, வேறு பெட்டிக்கு செல்லுமாறு கூறியிருக்கிறார். இதனால் மர்ம நபர், காவலருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மர்ம நபர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால், பெண் காவலர் ஆசீர்வாவின் கழுத்தில் குத்திவிட்டு, கீழே குதித்து தப்பியுள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த பயணிகள் அலறியுள்ளனர். கத்தி குத்து சம்பவத்தால், ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த பெண் காவலர் ஆசீர்வாவை, அங்கிருந்த ரயில்வே போலீசார் மீட்டு, பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர்.

அவசர பிரிவில் சேர்க்கப்பட்ட ஆசீர்வாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமுடம் இருப்பதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால், கத்தியால் குத்திய நபர் யார் என்பதை உடனடியாக அடையாளம் கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர. இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி , கொடுங்காயம் ஏற்படுத்துதல், உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, 4 தனிப்படை அமைத்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர், பெண் காவருக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவரா, அல்லது காதல் விவகாரத்தால் ஏற்பட்ட கத்தி குத்து சம்பவமா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில்வே நிலையத்தில் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பிற்காக வந்த பெண் காவலர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் தங்களுடைய பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாக பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டெல்லியில் சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலி

Mohan Dass

சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்ற ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்!

Web Editor

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான முடிவு எடுக்கக்கூடாது – நீதிமன்றம்

EZHILARASAN D