மேதகு-2 திரைப்படம் ஆகஸ்ட் 26ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு Tamils OTT-யில் வெளியாகிறது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான ‘மேதகு’ படம் கடந்த ஆண்டு வெளியானது. அதன் இரண்டாம் பாகம், ‘மேதகு-2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த தஞ்சை குகன் குமார், அயர்லாந்தில் உள்ள கவிஞர் திருக்குமரன் மற்றும் டென்மார்க்கை சேர்ந்த சுமேஷ் குமார் ஆகியோர் இதன் தயாரிப்பு நிர்வாகிகளாக செயல்பட்டு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
பிரபாகரனாக, கௌரிசங்கர் நடித்துள்ளார். நாசர் கவுரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். இரா.கோ. யோகேந்திரன் இயக்கியுள்ளார். பிரவின் குமார் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஓடிடி-யில் மேதகு-2
இந்தியாவில் இந்தப் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காது என்பதால், இதை வெளியிடுவதற்காகவே, தமிழ்ஸ் ஓடிடி என்ற புதிய தளத்தை தொடங்கி வெளியிட உள்ளனர். இத்திரைப்படம் ஆகஸ்ட் 26ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு Tamils OTT-யில் http://www.tamilsott.com இல் வெளியாகிறது.
-ம.பவித்ரா








