மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கின் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அவரது மனைவி மற்றும் தனி உதவியாளர் ஆகியோர் உயிரிழந்தனர்.
மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக், தனது குடும்பத்துடன் கர்நாடகா மாநிலம் எல்லாப்பூர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அங்கோலா அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், ஸ்ரீபத் நாயக், அவரது மனைவி விஜயா மற்றும் உதவியாளர் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது, அவரது மனைவி மற்றும் தனி உதவியாளர் ஆகிய இருவரும் கொண்டுவரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக் முதற்கட்ட சிகிச்சை முடிந்து கோவா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Advertisement: