தற்போது நடைபெறவிருக்கும் தேர்தல் நேர்மைக்கும், ஊழலுக்கும் இடையேயான போர் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், முதல் முறை வாக்காளர்கள் சாதிப்படி வாக்களிக்காமல் சாதிப்பவருக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மக்களை செழுமைக்கோட்டிற்கும் மேலே கொண்டு செல்வதுதான் மக்கள் நீதி மய்யத்தின் கனவு என்று கூறிய கமல்ஹாசன், பக்கத்து மாநிலம் பொறாமை படும் அளவிற்கு மழை பெய்தாலும், தமிழகத்தில் குடி தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாகக் குற்றம்சாட்டினார்.







