முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

வேளாண் சட்டங்கள் அரசியலமைப்பு ரீதியில் செல்லுமா? செல்லாதா?; உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு!

வேளாண் சட்டங்கள் அரசியலமைப்பு ரீதியில் செல்லுமா? செல்லாதா? என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி திமுக எம்பி திருச்சி சிவா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவில்லை என தலைமை நீதிபதி பாப்டே அதிருப்தி தெரிவித்தார்.

போராட்டத்தில் தற்கொலை சம்பவங்கள் நேரிடும் நிலையில், அங்கே என்ன நடக்கிறது? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். வேளாண் சட்டங்கள் சிறந்தவை என ஒரு மனு கூட தாக்கல் செய்யப்படாததை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, மத்திய அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டார்.
மேலும், வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை மத்திய அரசு

தற்காலிகமாக நிறுத்தி வைத்தால், விவசாயிகளுடன் பேச குழு அமைக்கிறோம் என்றும் கூறினார். இல்லையெனில், நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என்று தலைமை நிதிபதி பாப்டே எச்சரித்தார். இதைத் தொடர்ந்து, அரசியலமைப்பு ரீதியாக வேளாண் சட்டம் செல்லுமா? செல்லாதா? என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

“தடுப்பூசிகள் போதுமான அளவில் மக்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தப்படும்”: பிரதமர் மோடி

Gayathri Venkatesan

ருமேனியா பட விழாவில் நயன்தாராவின் ’கூழாங்கல்’

Gayathri Venkatesan

ஒரு தேநீரின் விலை ரூ.1,000 என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

Saravana Kumar

Leave a Reply