சுகாதார கட்டமைப்புகளைபை தயார் நிலையில் வைத்திருக்க மாநில அரசுகளுக்கு
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.
சர்வதேச அளவில் உருமாற்றம் பெற்ற பி.எஃப்.7 கொரோனா பரவல் மற்றும் நாட்டில்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் மாநில சுகாதார அமைச்சர்களுடன்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனை கூட்டத்தில், கொரோனாவை எதிர்கொள்ளவும், கட்டுப்படுத்தவும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறுவுறுத்தியுள்ளார்.

மேலும் , மாநிலங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவும், கொரோனா
மேலாண்மைக்கான அனைத்து வசதிகளையும் தயார்நிலையையும் வைத்திருக்கவும்
அறிவுறுத்திய மத்திய அமைச்சர், கடந்த முறை எவ்வாறு கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் கூட்டாக இணைந்து செயல்படனவோ அதே போன்று தற்போதும் செயலாற்ற வேண்டுகோள் வைத்த மான்சுக் மீண்டவியா, கொரோனாவை தடுக்கவும் கட்டுப்படுத்தவும், அனைத்து மாநிலங்களும் தங்களது கண்காணிப்பு அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அறுவுறுத்தியுள்ளார்.
கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், மருத்துவமனை உள்கட்டமைப்பின் தயார்நிலையை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ள மத்திய சுகாதாரத்துறை
செயலாளர் ராஜேஷ் பூசன், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தற்போதைய நிலவரத்திற்கு ஏற்றபடி கடைப்பிடிக்கவும், மாவட்ட அளவில் கண்காணிப்பையும், கொரோனா பரிசோதனையும் தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்
குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைபடி
ஆர்டிபிசியர் ஆன்ட்டி ஜெனெஸ்ட் முறையில் பரிசோதனையை செய்ய வேண்டும் எனவும்
ராஜேஷ் பூசன் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.







