மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக அதிகரிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக அதிகரிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகக் கூறினார்.
கடந்த 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார். வியாபார கப்பல் போக்குவரத்தை ஊக்குவிக்க கப்பல் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்திற்கு அனுமதி உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவையில் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, புதிய அமைச்சர்களுடன் நடைபெற்ற முதல் கூட்டம் இது. இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







