ஓடும் பஸ்சில் குண்டுவெடிப்பு: சீன என்ஜினீயர்கள் உட்பட 13 பேர் பலி

பாகிஸ்தானில், ஓடும் பேருந்தில் குண்டு வெடித்ததில் சீனாவைச் சேர்ந்த 9 பேர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள கொகிஸ்தானில் தாசு நீர் மின் நிலையம் அமைக்கும் பணி நடந்து…

பாகிஸ்தானில், ஓடும் பேருந்தில் குண்டு வெடித்ததில் சீனாவைச் சேர்ந்த 9 பேர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள கொகிஸ்தானில் தாசு நீர் மின் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சீனாவின் ஜிஞ்சியாங் மாகாணத்தையும் அரபிக் கடலில் தென்மேற்கு பாகிஸ்தானையும் இணைக்கும் விதமாகவும் இந்தப் பகுதியில் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பகுதிக்கு செல்வதற்காக ஒரு பேருந்தில் சுமார் 30 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அதில் சீனாவை சேர்ந்த என்ஜினீயர்கள், தொழிலாளர்கள் மற்றும் பாகிஸ் தான் தொழிலாளர்களும் இருந்தனர்.

அப்போது திடீரென பேருந்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் பேருந்தில் இருந்த சீனாவை சேர்ந்த 9 பேர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் என்று கூறப்படுகிறது. குண்டு வெடிப்புக்குப் பிறகு பேருந்து கவிழ்ந்ததாவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் துகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானை, சீனா கேட்டுக் கொண்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.