முக்கியச் செய்திகள் இந்தியா

ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு, மருத்துவமனைகளில் அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1,68,912 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிக்கப்பட்டு நேற்று மட்டும் 904 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 10.45 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி நாட்டில் பற்றாக்குறையாக உள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், மத்திய அரசு ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதியை தடை செய்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு கட்டுக்குள் வரும் வரை, ரெம்டெசிவிர் மருந்து மற்றும் அதனை தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்கள் அனைத்தையும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடைவிதித்துள்ளது. மருத்துவமனைகளில் கோவிட் -19 தொற்றுப் பாதித்தவர்களின் நோய்த்தொற்றின் தீவிரத்திற்கு ஏற்ப ரெம்டெசிவிர் மருந்து அளிக்கப்பட்டு வருகிறது.

ரெம்டெசிவிர் மருந்தை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், தங்களின் இணையதளங்களில் மருந்து இருப்பின் அளவு குறித்து பதிவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மருந்து இருப்பு எண்ணிக்கை குறித்து அவ்வபோது ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மருந்து ஆய்வாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ஏழு நிறுவனங்கள் உரிமம் பெற்று, ரெம்டெசிவிர் மருந்தை உற்பத்தி செய்து வருகின்றன. மாதம் தோறும் 38 லட்சத்துக்கு அதிகமான மருந்துகள் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

Jeba

ஊழல் செய்ததாக நிரூபித்தால் பொது வாழ்கையில் இருந்து விலகத் தயார்: செல்லூர் ராஜு

Ezhilarasan

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Gayathri Venkatesan