முக்கியச் செய்திகள் இந்தியா

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்: ராகுல்காந்தி, பிரியங்கா, நடிகர் சோனு சூட் வலியுறுத்தல்!

மத்திய அரசு பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வரும் மே மாதம் 4-ம் தேதி முதல் பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளது. தற்போது நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் நடிகர் சோனு சூட் ஆகியோர் சிபிஎஸ்இ இயக்குநரகத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “கொரோனா 2-வது அலை காரணமாக சிபிஎஸ்இ பொது தேர்வு நடத்தும் முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டும். பெரிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பு அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்கவேண்டும். இளைஞர்களின் எதிர்காலத்துடன் மத்திய அரசு விளையாட நினைக்கிறது” என அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய துணைத் தலைவர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில்,“சிபிஎஸ்இ கல்வி இயக்குநரகம் பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மறு பரிசீலனை செய்யவேண்டும். தேர்வு நடைபெறும்போது கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் நிச்சயமாக போதுமானதாக இருக்காது. நாட்டில் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவரும் வேளையில் சிபிஎஸ்இ தேர்வு நடத்துவதை மறுபரீசிலினை செய்யவேண்டும்” என கூறியுள்ளார். இது சம்பந்தமான கடிதத்தையும் சிபிஎஸ்இ இயக்குநரகத்துக்கு அவர் அனுப்பியுள்ளார்.

இதே கருத்தை வலியுறுத்தி நடிகர் சோனு சேட் வெளியிட்டுள்ள வீடியோவில்,“கொரோனா இரண்டாவது நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடத்துவது நியமற்றது. மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு பொதுத் தேர்வை ரத்து செய்யவேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மே 4 முதல் ஜூன் 7-ம் தேதிவரை பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளது. அதேபோல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 4-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் தேர்வு நடைபெறும் மையங்களின் எண்ணிக்கை 40 முதல் 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வை ரத்து செய்ய கோரி ட்விட்டர் வலைத்தளத்தில் “cancelboardexams2021” என்ற ஹாஷ்டேக் ட்விட்டர் வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது – துணை முதல்வர்

Gayathri Venkatesan

நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் பிரச்சாரம்!

Saravana Kumar

”திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”- முதல்வர் பழனிசாமி!

Jayapriya