முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மாதிரி வீட்டு வாடகை சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மாதிரி வீட்டு வாடகை சட்டத்தை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் சுற்றுக்கு அனுப்புவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், வீடுகள், மனைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றை வாடகைக்கு விடும்போது ஏற்படக்கூடிய நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண, மத்திய அரசால் உருவாக்கப்பட்ட மாதிரி வாடகைதாரர் சட்டத்தை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் ஏற்கும் வகையில், அதை சுற்றுக்கு அனுப்ப ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், இந்தியா- அர்ஜென்டினா இடையே, கனிம வளத் துறையில், ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நாடுகள் – இந்தியா இடையிலான பொது ஊடகங்கள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மாலத்தீவுகள் – இந்தியா, மற்றும் ஜப்பான் – இந்தியா இடையே நகர்ப்புற வளர்ச்சித் துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பேய்க்கே பேன் பார்த்த மூன்று பேரின் கதை தான் ரிப்பப்பரியா?

Jayasheeba

மூட்டை மூட்டையாக மதுபாட்டில்களை வாங்கிச் செல்லும் சேலம் மதுஅருந்துவோர்

Vandhana

ஸ்டெர்லைட் ஆலை மூடல் – இத்தனை பாதிப்புகளா?

EZHILARASAN D