முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கருணாநிதி பிறந்த நாள்: 7 திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 7 திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார்.

சென்னையில் நாளை நடைபெறும் விழாவில், மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து நியாய விலைக்கடைகளில் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் மற்றும் இரண்டாம் தவணையாக கொரோனா நிவாரணத்தொகை 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்திடவுள்ளார்.

கோயில்களில் மாத ஊதியமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், உள்ளிட்ட பணியாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய், 10 கிலோ அரிசி, 13 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.

கொரோனா தொற்றால் இறந்த பத்திரிகையாளர், மருத்துவர், காவலர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், திருநங்கையர் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணிக்க அனுமதி வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.

இதனை தொடர்ந்து உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கவுள்ளார்.

Advertisement:

Related posts

கொரோனா கட்டுக்குள் வர மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளே காரணம்: உயர் நீதிமன்றம்!

Karthick

“தொகுதிவாரியான தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்” – மநீம மகேந்திரன்

Saravana Kumar

கோப்ரா டீசர்.. பரமப்பத விளையாட்டு காட்டும் விக்ரம்!

Saravana