நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கிய நிலையில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். இதையொட்டி நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் பாதிப்புகள் பற்றி சுட்டிக்காட்டப்பட்டன.
மத்திய அரசின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார்.
மத்திய பட்ஜெட்டுக்கான ஒப்புதலைப் பெறும் வகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், நிதியமைச்சக அதிகாரிகள் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் அறிவிப்பை வெளியிட்டு நிர்மலா சீதாராமன் உரையாற்ற உள்ளார். இதில், தொழில் துறையினருக்கான சலுகைகள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கான புதிய திட்ட அறிவிப்புகளும் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.







