தடையில்லாமல் மக்களுக்கு பால் கொண்டு சேர்ப்பதற்கு துறை ரீதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
சென்னை முழுவதும் தற்பொழுது மாண்டஸ் புயல் காரணமாகப் புறநகரில் பல்வேறு இடங்கள் மோசமடைந்துள்ளது. சென்னை முழுவதும் இரவு நேரங்களில் வழக்கமாகப் பால் விநியோகம் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது சீரான பால் விநியோகம் நடைபெறுகிறதா என பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கொரட்டூர் ஆவின் நிறுவனத்தில் திடீர் ஆய்வு செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது செய்தியாலர்களை சந்தித்து பேசிய அமைச்சர், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்லக்கூடிய 14 லட்சம் லிட்டர் பால் 28 லட்சம் பாக்கெட்டுகளை உற்பத்தி செய்யும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. தற்பொழுது 12 லட்சம் லிட்டர் பால் விநியோகத்திற்குச் சென்றுள்ள நிலையில் மீதமுள்ள பால் பாக்கெட்டுகளை பேக்கிங் செய்யும் பணி தற்போது முழுவீச்சு நடைபெற்று வருகிறது.
மேலும் 33 வாகனங்கள் செல்ல வேண்டிய சூழலில் இதுவரை 21 வாகனங்கள் சென்றுள்ளது. மீதமுள்ள 12 வாகனங்கள் ஓரிரு மணி நேரங்கள் சென்றுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்படாததால் மழைக்காலங்களில் பேரிடர் பாதிப்பு காலத்தில் ஒரு லிட்டர் பால் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பால் அதிக விலைக்கு விற்பவர்கள் புகார் தெரிவிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்த இயற்கை சீற்றங்கள் வந்தாலும் எதிர்கொள்வதற்கு ஆவின் நிர்வாகம் தயாராக உள்ளது. ஆவின் பால் எடுத்துச் செல்லக்கூடிய வாகனங்களுக்குச் சீராக ஆவின் பால் கொண்டு சேர்ப்பதற்கு துறை ரீதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.