மாண்டஸ் புயலினால் பாதுகாப்பு கருதி மட்டுமே மின் விநியோகம் நிறுத்தப்பட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் உள்ள மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நமது செய்தியாளருடன் கலந்துரையாடிய அமைச்சர், முன்னெச்சரிக்கைப் பணிகளுக்காக 44,000 மின்கம்பங்கள் மாற்றப்பட்டிருந்தன. நேற்றிரவு நள்ளிரவு வரை மின் விநியோகத்தில் பாதிப்பில்லை என்று தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புயல் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் அமைந்துள்ள 355 துணை மின் நிலையங்களில் 10 துணை மின் நிலையங்களில் மட்டுமே மின் வினியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டதாக தெரிவித்த அவர், “மின்னகத்தில் மழை காரணமாக 26 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளது. நள்ளிரவுக்குப் பிறகு மட்டும் 16,000 அழைப்புகள் வந்துள்ளது” என்று தெரிவித்தார்.மேலும், “மாண்டஸ் புயலினால் பாதுகாப்பு கருதி மட்டுமே மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் களத்திற்கு சென்று ஆய்வு செய்யப்பட்ட பிறகே மின் விநியோகம் பொதுமக்கள் மின்வாரியத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 11,000 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்றும் அமைச்சர் கூறினார்.