காரில் சீட் பெல்ட் அணியாத இங்கிலாந்து பிரதமர் – அபராதம் விதித்த காவல்துறை

காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு காவல்துறை அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பல்வேறு புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளம்பரப்படுத்துவதற்காக காரில் பயணித்தபடி…

காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு காவல்துறை அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பல்வேறு புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளம்பரப்படுத்துவதற்காக காரில் பயணித்தபடி வீடியோ மூலம் பேசினார். இந்த வீடியோவில் பிரதமர் ரிஷி சுனக் காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தபடி பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ வைரலாக சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இங்கிலாந்தில் மருத்துவ காரணங்களுக்காக விலக்கு பெற்றவர்களை தவிர மற்ற நபர்கள் அனைவரும் காரில் சீட் பெல்ட் அணிவது கட்டாயம். இந்நிலையில் பிரதமரே சீட் பெல்ட் அணியாமல் சென்றதை பலரும் விமர்சித்தனர். மறதியின் காரணமாக சிறிது தூரம் சீட் பெல்ட் அணியவில்லை என தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து ரிஷி சுனக் மன்னிப்பு கோரினார்.

ஆனால், ரிஷி சுனக்கின் இந்த செயலுக்கு லாகன்ஷைர் காவல்துறை அபராதம் விதித்துள்ளது. அவருக்கு 100 புவுண்டுகள் அபராதம் விதிகப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் 10,032 ரூபாய்.ஒரு மாத காலத்துக்குள் இதை செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.