பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தனது காதலியை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் (56) தனது காதலியான கேரி சைமண்ட்ஸுன், திருமணம் செய்துகொள்ளாமல் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு கடந்த ஆண்டு வில்பிரட் லாரி நிகோலஸ் ஜான்சன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள விருப்பதாக, ஜான்சன் – கேரி சைமண்ட்ஸ் கூட்டாக அறிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன்- கேரி சைமண்ட்ஸ் திருமணம், லண்டன் தேவாலயம் ஒன்றில், நேற்று நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், அவர்களுக்கு நெருக்கமான 30 பேர் மட்டுமே பங்கேற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஏற்கனவே இருமுறை திருமணம் நடைபெற்று விவாகரத்து பெற்றவர். இது அவருக்கு மூன்றாவது திருமணம்.