முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

’அந்த ஒன்றரை வருடம் என்னால் தூங்கவே முடியவில்லை’: ஜடேஜா பிளாஷ்பேக்!

’அந்த ஒன்றரை வருடம் நான் தூங்கவே இல்லை, அந்த வேதனைதான் என் திறமையை நிரூபிக்க என்னைத் தூண்டி கொண்டே இருந்தது என்று தெரிவித்திருக்கிறார், பிரபல கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜா.

இந்திய கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. டெஸ்ட், ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் முக்கிய இடம் வகிக்கும் ஜடேஜா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக இங்கிலாந்து செல்லும் அணியில் இடம் பிடித்திருக்கிறார். தற்போது மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இந்திய அணியுடன் இணைந்திருக்கிறார் ஜடேஜா.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், அணியில் இடம் கிடைக்காத நாட்கள் பற்றி இப்போது மனம் திறந்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸின் செல்லப்பிள்ளையான ஜடேஜா, கூறியிருப் பதாவது:

சில வருடங்களுக்கு முன் அணியில் இடம் கிடைக்காத நாட்களில் என்னால் தூங்கவே முடியவில்லை. ஒவ்வொரு நாள் இரவும் அணியில் இடம் கிடைப்பதற்காக, என் திறமையை நிரூபிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். அதற்கான வேலைகளில் இறங்கினேன். பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இணைந்தேன். ஆனால், வெளிநாடுகளில் ஆடியபோதும் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஒரு நாள் போட்டிகளிலும் ஆடவில்லை. உள்ளூர் போட்டிகளிலும் விளையாடவில்லை. என் திறமையை நிரூபிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை.

இதையே நினைத்துக் கொண்டு வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். 2018 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. 160 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து இந்திய அணி தடுமாறி கொண்டிருந்தபோது, நான் இறங்கினேன். இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்து 86 ரன்கள் எடுத்தேன். அந்த போட்டி என்னை மாற்றியது. பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டேன். என் நம்பிக்கை, என் ஆட்டம் அனைத்தும் அங்கிருந்து மாற்றியது. பிறகு ஒரு நாள் போட்டியில் சேர்க்கப்பட்டேன். அதிலிருந்து சிறப்பாக போய் கொண்டிருக்கிறது.

இவ்வாறு ஜடேஜா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முதல் டி20 போட்டி: இந்தியா – இலங்கை மோதல்

Halley Karthik

250 மாணவ, மாணவியர்கள் இரண்டு கையில் சிலம்பம் சுற்றி உலக சாதனை!

Jayapriya

மொட்டை மாடியில் தேங்கி நின்ற மழை நீரில் கால் வைத்ததால் உயிரிழந்த சிறுமி!

Jeba Arul Robinson