விவசாயிகள் போராட்டம்: இந்திய அரசு மீது இங்கிலாந்து அரசு அதிருப்தி

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் விஷயத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு அதிருப்தி அளிக்கிறது என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டத்திருத்தை கண்டித்தும், விளைபொருளுக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க வேண்டும் என்று இந்தியா முழுவதிலும்…

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் விஷயத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு அதிருப்தி அளிக்கிறது என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டத்திருத்தை கண்டித்தும், விளைபொருளுக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க வேண்டும் என்று இந்தியா முழுவதிலும் உள்ள விவசாயிகள் 100 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடபடவில்லை. இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக லண்டன் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.

விவாதத்தில் ஈடுபட்ட 18 எம்பிக்களில் 17 எம்பிக்கள் விவசாயிகள் போராட்டத்தில் இந்திய அரசின் நிலைப்பாட்டை விமர்சித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக செய்திவெளியிட்ட ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் அவர்கள் பேசினர். மேலும் இந்திய அரசிடம் இதுதொடர்பாக லண்டன் அரசு தனது அதிருப்தியை இந்தியாவிடம் தெரிவித்தது.

“இங்கிலாந்து அரசின் இந்நிலைப்பாடு ஒரு தலைபட்சமாக உள்ளது என்றும் ஓட்டு அரசியலுக்காக இந்தியாவைப் போல ஒரு ஜனநாயக நாட்டின் நிலைப்பாட்டை விமர்சிப்பது தவறு” என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தன் சிரிங்லா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.