தேர்தலில் சீட் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாஜகவிற்கு வரவில்லை என்றும் அக்கட்சி மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகவே வந்ததாக பாஜக செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
உலக மகளிர் தினத்தன்று ஹரியானாவில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் பெண் எம்.எல்.ஏ.வை காங்கிரஸ் கட்சி இழிவுபடுத்தியதாகக் கூறி சென்னை ராயப்பேட்டையில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாடம் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக செய்தி தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகள் பதவியில் இருக்கும்போது பெண்களுக்கு உரியமரியாதை தருவதில்லை எனக் கூறினார்.
குஷ்புக்கு தொகுதி ஒதுக்கப்படாத சூழல் ஏற்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், பாஜக குஷ்புவை கைவிடவில்லை எனவும் அவருக்கு உரிய மரியாதை தரப்படும் எனவும் தெரிவித்தார். இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் பாஜகவிற்கு வரவில்லை எனக் கூறினார். பாஜக மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகவே அக்கட்சிக்கு வந்ததாகவும் குஷ்பு தெரிவித்தார்.