அமமுக – தேமுதிக உடனான தொகுதிப் பங்கீடு குறித்த விவரம் இன்று தெரிய வரும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது. அதைத்தொடர்ந்து தேமுதிக தனியாக தேர்தலை சந்திக்கும் என அரசியல் களத்தில் பேசப்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களாக அமமுகவுடன் தேமுதிக தொகுதி பங்கீடு குறித்து பேசி வந்தது. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொகுதி பங்கீடு குறித்த விவரம் இன்று தெரிய வரும் என கூறினார்.







