நாக்பூரில் மார்ச் 15ஆம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு!

மகராஷ்டிராவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், நாக்பூரில் வரும் மார்ச் 15ஆம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் மகராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத் மற்றும் தமிழ்நாடு…

மகராஷ்டிராவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், நாக்பூரில் வரும் மார்ச் 15ஆம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் மகராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் சமீபகாலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மகராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 800 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாக்பூரில் வரும் மார்ச் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு உத்தரவை பிறப்பித்தது.

ஊரடங்கில், அத்தியவசிப் பொருட்களான காய்கறி, பழச்சாறு, பால் உள்ளிட்ட கடைகள் மக்கள் பயன்பாட்டிற்காக இயங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டில் தினந்தோறும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக மாகராஷ்டிராவில்தான் பதிவு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், உச்சபச்சமாக 13 ஆயிரத்து 659 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் அம்மாநிலத்தில்தான் பதிவு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.