உடுமலையில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயிலில் நடைபெற்ற “பவித்ர உற்சவம்” நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வெங்கடேச
பெருமாள், ரேணுகாதேவி கோயில் திருப்பதியைப் போன்ற வடிவமைப்பினை கொண்டு காட்சி அளிப்பதால் “உடுமலை திருப்பதி” என்று பக்தர்கள் அழைக்கின்றனர்.
தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் பொது மக்களின் நலன் மற்றும் தீர்க்காயுள் ஆகியவற்றை வேண்டி சிறப்பு யாக வேள்விகள் நடத்தப்பட்டு “பவித்ர உத்ஸவம்” சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முக்கிய நிகழ்வான பூர்ணாஹுதி யாகத்தில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
2 நாட்களாக யாக வேள்விகள் நடத்தப்பட்டு பூர்ணாஹுதி யாகத்தில் சமர்ப்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உடுமலை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ரூபி.காமராஜ்