உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
9-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வந்தது. கடைசி நாளான நேற்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிச்சுசுற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா 2வது சுற்றில் நீரஜ் சோப்ரா 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் நீரஜ் சோப்ரா படைத்துள்ளார்.
இந்நிலையில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில், நீரஜ் சோப்ராவின் அர்ப்பணிப்பு, துல்லியம் மற்றும் அவரது ஆர்வம் ஆகியவை அவரை தடகளத்தில் ஒரு சாம்பியனாக மட்டும் இல்லாமல், விளையாட்டு உலகில் ஈடு இணையற்ற வீரராக அடையாளம் காட்டுகின்றன என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பல்வேறு தரப்பினர் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.







