நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள நீலாயதாட்சி அம்மன் ஆலயத்தில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு நடைபெற்ற பூஜையில், 108 பெண்கள் கலச கும்பத்திற்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
நாகப்பட்டினத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த காயாரோகணம் உடனுறை நீலாயதாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு 1008 சிறப்பு சுமங்கலி பூஜை நடைபெற்றது.
சுற்றுப்புற கிராமப் பகுதிகளை சேர்ந்த 1008 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு 1008 கலச கும்பங்கள் வைக்கப்பட்டு அதற்கு மஞ்சள், தாலிக்கயிறு, பொட்டு, வளையல் வைக்கப்பட்டு வேத மந்திரங்களை ஓதி குங்குமத்திற்கு அர்ச்சனை செய்து சுமங்கலி பூஜை செய்து அம்மனை வழிபாடு செய்தனர். தொடர்ந்து காயாரோகன சுவாமி மற்றும் நிலையத் ஆட்சி அம்மனுக்கு தீபாராதனை செய்யப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ரூபி.காமராஜ்







