தஞ்சாவூர் பனகல் மாளிகை முன்பு நேற்று திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை குறித்து சர்ச்சையான கருத்தை கூறியதாக கூறப்படுகிறது.
இதற்கு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுணா, என்.ஆனந்த் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலிசார் கைது செய்து தஞ்சாவூர் அழைத்துச் சென்றனர்.
முதலமைச்சர் மற்றும் நடிகை குறித்து அவதூறு பேசியதாக உதயநிதி கைது செய்யப்பட்ட நிலையில், திமுக தொடர்ந்த சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் விசாரணைக்கு பின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை காவல் நிலைய பிணையில் இன்றே விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை வெளியிட்டுள்ளது.




