பத்தாண்டு காலமாக ஆட்சியில் இருந்து செய்யாததையா, தற்போது அதிமுக செய்துவிடப்போகிறது என தெரிவித்தார்.
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். இந்நிலையில், சேப்பாக்கம் தொகுதியில் மாட்டான்குப்பம், வி.ஆர்.பிள்ளை தெரு, கற்பக கண்ணியம்மன் கோவில் தெரு, சுங்குவார் தெரு ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதி மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், பூக்களை தூவியும் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீடு வீடாக வாக்குசேகரித்து வருவதால், மக்களிடையே எழுச்சி காணப்படுவதாக கூறினார்.
மேலும், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக முதலில் கூறியவர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான், ஆனால் 8 முறை சம்மன் அளித்தும் இன்னும் அவர் பதில் அளிக்கவில்லை என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நிச்சயம் உண்மைகள் வெளிவர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து, அதிமுக சந்தர்ப்பவாத கூட்டணி என்று கூறிய அவர், சி.எ.எ தொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தான் வேண்டும் என்று மக்களை தூண்டி விடுவதாக தெரிவித்தார். ஆனால் தற்பொழுது சிறுபான்மையினர் ஓட்டுக்காக அதனை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என்று மாற்றி பேசி வருகிறார் எனக் கூறினார்.







