முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

900 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த எரிமலை!

ஐஸ்லாந்து நாட்டில் கடந்த 900 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாகத் தென்மேற்கு பகுதியில் உள்ள ஃபேக்ரதால்ஸ் ஃப்யாட்ல் எரிமலை வெடித்து நெருப்புக்குழம்பை உமிழ்ந்து வருகிறது.

ஐஸ்லாந்து நாட்டின் தலைநகர் ரேக்யூவீக் நகரிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது ஃபேக்ரதால்ஸ் ஃப்யாட்ல் எரிமலை. இந்த எரிமலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடித்துள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபேக்ரதால்ஸ் ஃப்யாட்ல் எரிமலையின் வாய் பகுதி 500 முதல் 700 நீளமாகும். கடந்த 900 வருடமாக அமைதியாக இருந்த இந்த எரிமலை தற்போது முதன் முறையாக வெடித்துச் சிதறியுள்ளது.


ஃபேக்ரதால்ஸ் ஃப்யாட்ல் எரிமலை வெடிப்பு காரணமாக ஐஸ்லாந்து தலைநகர் ரெய்காவிக் புறநகரில் உள்ள கெய்லிர் மலைக்கு அருகில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஐஸ்லாந்தில் கடந்த சில வாரங்களாக 40 முறை சிறியளவிலான நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த எரிமலை வெடிப்பு காரணமாக தற்போதுவரை பொதுமக்கள் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை. ஃபேக்ரதால்ஸ் ஃப்யாட்ல் எரிமலை அருகிலிருந்த குடியிருப்பு வாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஃபேக்ரதால்ஸ் ஃப்யாட்ல் எரிமலை வெடிப்பு காரணமாக ஐஸ்லாந்து நாட்டில் விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு!

Halley karthi

“உணவகங்களை மூடுமாறு மாநகராட்சி அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்” – ஹோட்டல்கள் சங்கம்

Jeba Arul Robinson

தொலைப்பேசி ஒயர் மாடலில் புதியவகை நெக்லஸ்: வைரலாகும் புகைப்படம்!

Halley karthi