உதயநிதியை அமைச்சராக்க வேண்டும்; திமுகவில் வலுக்கும் கோரிக்கை

உதயநிதியை அமைச்சராக்க வேண்டுமென திண்டுக்கல் திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திண்டுக்கல் திமுக கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தின் கலைஞர் அரங்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ. பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. அதில், அமைச்சர்…

உதயநிதியை அமைச்சராக்க வேண்டுமென திண்டுக்கல் திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திண்டுக்கல் திமுக கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தின் கலைஞர் அரங்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ. பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. அதில், அமைச்சர் சக்கரபாணி மற்றும் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் கலந்து கொண்டனர்.

அதில், வரும் ஜூன் 3ஆம் தேதி கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாள் விழாவை சிறப்பாக மாவட்டம் முழுவதும் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுபோலவே திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என திண்டுக்கல் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஏற்கனவே உதயநிதியை அமைச்சராக்க வேண்டுமென பல அமைச்சர்கள் பேட்டி வாயிலாக தங்களது விருப்பத்தை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் உதயநிதி அமைச்சராக்க வேண்டுமென திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக இன்று காலை சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இங்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் உதயநிதியின் நெருங்கிய நண்பரும், அமைச்சருமான அன்பில் மகேஸ்.
தற்போது திண்டுக்கல் மாவட்ட திமுக சார்பாகவும் உதயநிதியை அமைச்சராக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்தடுத்து மற்ற மாவட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் எனவும் தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.