உத்தவ் தாக்கரே நாளை டெல்லி பயணம்; காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு!

உத்தவ் தாக்கரே நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு டெல்லி பயணம் மேற்கொள்வார் என்று சிவசேனாவின் UBT எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்தார்.  மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் தொடர்பான பரபரப்பான சூழலில் , முன்னாள் முதல்வரும்,…

உத்தவ் தாக்கரே நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு டெல்லி பயணம் மேற்கொள்வார் என்று சிவசேனாவின் UBT எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்தார். 

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் தொடர்பான பரபரப்பான சூழலில் , முன்னாள் முதல்வரும், சிவசேனா UBT தலைவருமான உத்தவ் தாக்கரே செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) டெல்லி சென்றடைகிறார். நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு அவர் டெல்லியில் தங்குகிறார். டெல்லி பயணத்தின் போது அவர் மகாவிகாஸ் அகாடி தலைவர்களுடனும் பேசலாம் என்று கூறப்படுகிறது.

அடுத்த மூன்று நாட்களில் உத்தவ் தாக்கரேவின் அட்டவணை குறித்த தகவலை அளித்து, சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், கட்சித் தலைவருடன் ஆதித்யா தாக்கரே மற்றும் ராஷ்மி தாக்கரே ஆகியோரும் டெல்லி வரவுள்ளனர் என்றார். இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர் பல தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

சிவசேனா UBT தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரை சந்திக்கிறார். திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களையும் அவர் சந்திக்கிறார். அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

இவர்களை சந்திப்பதற்கு முன், உத்தவ் தாக்கரே செவ்வாய்கிழமை ரமேஷ் சென்னிதலாவை சந்திக்கிறார்.  அப்போது பல மட்டங்களில் அரசியல் கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகள் இடம்பெறும். இது தவிர, மகாராஷ்டிராவைச் சேர்ந்த பல எம்.பி.க்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.