விடாமுயற்சி படத்தின் சென்சார் அப்டேட் – புதிய ரிலீஸ் தேதி இதுவா?

நடிகர் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்ச்சி’ படத்தின் சென்சார் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தில் அஜித் உடன் திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, ஆரவ், அர்ஜூன் உள்ளிட்ட…

நடிகர் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்ச்சி’ படத்தின் சென்சார் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தில் அஜித் உடன் திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, ஆரவ், அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத்
இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர், பர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் பொங்கள் பண்டிகை அன்று வெளியாகும் என்று அறிவிக்கபட்ட நிலையில், லைகா நிறுவனம் திடீரென ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக அறிவித்தது. இதனால் அஜித் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். துணிவு திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அஜித் படத்திற்காக அவரின் ரசிகர்கள் மிக ஆவலாக  காத்திருக்கின்றனர்.

அஜித்குமாரின் 'விடாமுயற்சி' படத்தின் முதல் சிங்கள் எப்போது? - News7 Tamil

குட் பேட் அக்லி ஏப்.10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் விடாமுயற்சி வெளியீடு குறித்து கேள்விகள் எழுந்துள்ளது. இந்த நிலையில், விடாமுயற்ச்சி படத்தின் சென்சார் விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, விடாமுயற்சி படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்று வழங்கி இருக்கிறது.

இந்தப் படம் 2 மணி 30 நிமிடங்களை கொண்டுள்ளது. இதன் சான்றிதல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் படம் வருகிற ஜனவரி 23 அல்லது ஜனவரி 30 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.