ஆந்திராவில் கரை ஒதுங்கிய 9 உடல்கள் : காணாமல் போன காசிமேடு மீனவர்களா என கண்டறிய குழு அனுப்பி வைப்பு!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கொத்தபுரம் கடற்கரையில் இன்று 9 உடல்கள் கரை ஒதுங்கிய சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.

ஆந்திர மாநிலம் கோத்தப்பட்டினம் கடற்கரையில் இன்று 9 உடல்கள் கரை ஒதுங்கியுள்ளது. இது கடந்த சில நாட்களுக்கு முன் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், முரசு புயல் காரணமாக கடலில் சிக்கி மாயமான நிலையில், கோத்தப்பட்டினம் கடற்கரையில் கரை ஒதுங்கிய உடல்கள் அந்த மீனவர்களின் உடல்களா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே காணமல் போன காசிமேடு மீனவர்களை தேடும் பணியின்போது அவர்கள் சென்ற படகு கொத்தபுரம் கடற்கரையில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் கடலில் கவிழ்ந்து கிடப்பதாக கடலோர பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில் கொத்தபுரம் கடற்கரையில் இன்று 9 சடலங்கள் கரை ஒதுங்கியிருபது அதிர்ச்சியளித்துள்ளது. கரை ஒதுங்கிய 9 சடலங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தி, காணாமல் போன மீனவர்களின் நிலையை அறிய தமிழ்நாட்டிலிருந்து மீன்வளத்துறை உதவி இயக்குநர், 2 மீன்வளத் துறை உதவி ஆய்வாளர்கள், உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே காணாமல் போன காசிமேடு மீனவர்களின் உறவினர்கள் கதறி அழுதபடியே காசிமேடு மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கொத்தபுரம் கடற்கரையில் இன்று 9 சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.