சிவகாசி அருகே வீட்டின் கேட் இடிந்து விழுந்து சிறுமிகள் உயிரிழப்பு!

சிவகாசி அருகே வீட்டின் கேட் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் ராஜாமணி என்பவரது வீட்டின் கேட்டில் 2 சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். பெண் காவலரின் மகளும், அவரது உறவினர் ரமேஷ் என்பவரின் மகளுமான கமலிகா, ரிஷிகா கேட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது கேட் சரிந்து, சிறுமிகள் இருவரின் மீது விழுந்துள்ளது.

கேட் விழுந்தபோது, அருகில் யாரும் இல்லாததால், சிறுமிகள் உடனடியாக மீட்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் இரண்டு சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த சிறுமிகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நான்காண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீட்டின் கேட் இடிந்து விழுந்து சிறுமிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.