அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழப்பு!

ஸ்ரீபெரும்புதூரில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் இவர் குடும்பத்தை விட்டு ஸ்ரீபெரும்புதூரில் தங்கி ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்…

ஸ்ரீபெரும்புதூரில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் இவர் குடும்பத்தை விட்டு ஸ்ரீபெரும்புதூரில் தங்கி ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் தனது நண்பரை பார்க்க சென்று விட்டு போந்தூர் அருகே பெட்ரோல் போட்டு விட்டு செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் சாலையில் யுடர்ன் செய்யும் பொழுது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்பொழுது அடையாளம் தெரியாத வாகனம் தமிழரசன் உடலில் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி தமிழரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் தமிழரசனின் உடலை மீட்டு உடற்கூர் ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டிவி கேமராக்களை ஆய்வு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

ரூபி.காமராஜ்

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.