பெண்களை நிர்வாணப்படுத்தி கொடூரமாக நடத்திய வீடியோ வெளியான நிலையில் ‘இந்தியா’ கூட்டணி குழு மணிப்பூர் செல்கின்றனர்.
மணிப்பூரில் குக்கி- சொமி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்கள், நிர்வாணப்படுத்தப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூரில் கலவரம் தொடங்கிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது. சுமார் 2 மாதங்களுக்கு முன்பாக இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில் வீடியோ வெளியான நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வீடியோவுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், I.N.D.I.A கூட்டணி குழு ஜூலை 22ஆம் தேதி மணிப்பூர் செல்கிறது.
ஏற்கனவே ராகுல் காந்தி மணிப்பூர் சென்று மக்களை சந்தித்தார். மேலும் மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் குடியரசு தலைவரை சந்திக்க ‘இந்தியா’ கூட்டணி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நேரம் கேட்டு கடிதம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.







