அரியலூர் – ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவியை இருசக்கர வாகனத்தில் கடத்த முயன்ற இரு நபர்களை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டியை அடுத்த
சொக்கலிங்கபுரம் காலனி தெருவை சேர்ந்தவர் சேகர் . இவரது மகன் விஜி என்பவர் அதே பகுதியை சேர்ந்த மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 பயின்று வரும் ஒரு
மாணவியை காதலிப்பதாக கூறி வந்துள்ளார். இதனையறிந்த மாணவி தகவலை தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பிறகு மாணவியின் பெற்றோர் விஜி என்பவரை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமி பள்ளி முடித்து விட்டு வீட்டுக்கு செல்வதற்காக பள்ளிக்கு
வெளியில் நின்றுள்ளார். அப்போது அங்கு வந்த விஜி அவரது நண்பர் பாலாஜி உதவியுடன் 16 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளனர். அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நபர் மாணவியின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மாணவியின் பெற்றோர்கள் விரைந்து சென்று மீன்சுருட்டி கடை வீதியில் அவர்களை தடுத்து நிறுத்தினர். பெற்றோர்கள் தனது மகளைக் கேட்டபோது தன்னை வற்புறுத்தி காதலிக்க கூறி வந்ததால் நானும் காதலிப்பதாக மாணவி தெரிவித்தார்.
தனது மகளை மயக்கி தனிமையில் அழைத்துச் செல்ல திட்டமிட்ட விஜி மற்றும் அவரது
நண்பர் பாலாஜி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயங்கொண்டம் அனைத்து
மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் கடத்த முயன்ற விஜி என்பவரும் உதவியாக இருந்த பாலாஜி ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் விசாரித்து வருகின்றனர்.







