தூத்துக்குடியில் சாலை விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழப்பு!

தூத்துக்குடியில் சாலை விபத்தில் சிக்கிய இரண்டு விஏஓ-க்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார் புரம் பகுதியில் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் ஓய்வுபெற்ற விஏஓ ராமகிருஸ்ணன் மற்றும் விஏஓ பேச்சிராஜ் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது, இருவரும் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி உள்ளனர்.

அப்போது அவ்வழியாக வந்த மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் ராமகிருஸ்ணண் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து பேச்சிராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் இரண்டு விஏஓ-க்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.