ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியானது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கராக வலம் வருபவர் நடிகர் விஜய். அவர் தற்போது அரசியலில் இறங்கியுள்ளார். விஜய் நடிப்பில் 2009-ம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில் வரும் ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ பாடலில் விஜயின் மகன் ஜேசன் சஞ்சயின் நடனம் பலரது கவனத்தை ஈர்த்தது. அதன்பிறகு, பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக சஞ்சய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்டப்படிப்புக்காக அவர் வெளிநாடு சென்றார்.

இந்த சூழலில், விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். இவருடைய படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். எஸ்.தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

https://x.com/LycaProductions/status/1987739504179040623

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இந்தாண்டு தொடக்கத்தில் தொடங்கியது. சந்தீப் கிஷனின் காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த நிலையில், இப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சிக்மா’ என பெயரிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.