உதகையில் பூட்டி இருந்த வீட்டில் திருடிய நகைகளை பங்கு போடும்போது சிக்கிய திருடர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உதகை பழைய லிபர்ட்டி தியேட்டர் செல்லும் சாலையில் இரண்டு நபர்கள் அமர்ந்து நகைகளை பங்கு பிரித்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற திமுக நகர மன்ற உறுப்பினர் ஜார்ஜ் மற்றும் அவரது வாகன ஓட்டுனர் மஞ்சு ஆகியோர் சந்தேகம் அடைந்து அந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த நகைகள் திருடிய நகைகள் என உறுதி செய்து உடனடியாக உதகை மத்திய நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பெயரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதகை மத்திய நகர
காவல் துறை துணை ஆய்வாளர்கள் கனகராஜ், சுசீந்திரன் மற்றும் சிறப்பு துணை ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் நகைகளை பங்கு போட்டு கொண்டிருந்த நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடந்தது.
இந்த விசாரணையில், நகைகள் நேற்று இரவு உதகை மிஷினரிஹில் பகுதியில் உள்ள பூட்டி இருந்த ஒரு வீட்டில் திருடப்பட்ட நகைகள் எனவும் இவர்கள் அந்த பகுதியை சேர்ந்த கண்ணன், மோகன் என தெரிய வந்தது. பின்பு, நகைகளை மீட்ட காவல் துறையினர் நகைகளை திருடிய கண்ணன் மோகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
—-ம. ஶ்ரீ மரகதம்







