கோவை மாவட்டம் , மேட்டுப்பாளையம் அருகே பாலமலை பகுதியில்
நடிகர் சத்யராஜின் சகோதரி வீட்டு தண்ணீர் தொட்டியில் விழுந்த
குட்டியானையின் உடல் மீட்கப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பாலமலை பகுதியில் நடிகர்
சத்யராஜின் சகோதரி அபரஜிதா பங்களா அமைந்துள்ளது. இந்த பங்களாவில்
உள்ள தண்ணீர் தொட்டியில் ஒரு குட்டியானை ஒன்று விழுந்து உயிரிழந்தது
நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், யானை ஒரு வாரத்திற்கு முன்பு
உயிரிழந்த நிலையில் துறூநாற்றம் வீசிய பின் யானை உயிரிழந்தது தெரியவந்தது.
இந்நிலையில், யானையின் உடலை மீட்கும் பணியில் நேற்று மாலை வரை
வனத்துறையினர் ஈடுபட்டனர். மேலும், யானை கூட்டம் அந்த தண்ணீர்
தொட்டி யானை சூழ்ந்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து,
இன்று காலை தண்ணீர் தொட்டியில் விழுந்த யானையை , தொட்டியை
உடைத்து மீட்க வனத்துறையினர் முடிவு செய்தனர்
இரண்டு ஜே.சி.பி இயந்திரங்களை கொண்டு தண்ணீர் தொட்டி இடிக்கப்பட்டது.
பின்னர், உயிரிழந்த நிலையில் இருந்த குட்டியானையின் உடலை வளைகளை
கட்டி வனத்துறையினர் மீட்டனர். யானையின் உடலை வன கால்நடை மருத்துவர்
சுகுமார் தலைமையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளபட்டது. இதனையடுத்து,
யானையின் உடல் அருகில் உள்ள வனப்பகுதியினுள் புதைக்கபட்டது.
—கு.பாலமுருகன்







