தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு

தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலையை மர்ம நபர்கள் பெயர்த்தெடுத்து தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை வடக்கு வீதியில் காளிக்கோயில் சுற்றுச் சுவரை ஒட்டி 4 அடி உயரம் கொண்ட சிமெண்ட் தூணில் 2…

தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலையை மர்ம நபர்கள் பெயர்த்தெடுத்து தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை வடக்கு வீதியில் காளிக்கோயில் சுற்றுச் சுவரை ஒட்டி 4 அடி உயரம் கொண்ட சிமெண்ட் தூணில் 2 அடி உயரத்தில் எம்ஜிஆர் சிலை கடந்த 15 ஆண்டுகளுக்கு
முன்பு நிறுவப்பட்டது. இன்று காலை அந்த சிலை காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிலையின் அருகே உள்ள டீ கடையை திறக்க அதிகாலை 5 மணிக்கு வந்த டீக் கடைக்காரர் அருகில் இருந்த எம்ஜிஆர் சிலை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

இதனை அடுத்து அதிமுகவினருக்கு தகவல் தெரிய வர சம்பவ இடத்திற்கு வந்து சலசலப்பு ஏற்படுத்தினர். இந்நிலையில், அதிமுகவினர் காணாமல் போன எம்.ஜி.ஆர் சிலையினை அக்கம்பக்கத்தில் தேடினர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சை தெற்கு காவல் துறையினர் பெட்டிக் கடையின் பின்புறம் எம்ஜிஆர் சிலையை கண்டெடுத்தனர்.

பின்னர் மீட்கப்பட்ட சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவினர். தற்போது அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிலையை பெயர்த்து தூக்கி வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விச்சாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.