ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே பொது இடத்தில் மது அருந்தியதை தட்டி கேட்ட பெண் உதவி ஆய்வாளரை தகாத வாா்த்தையால் திட்டிக், கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி போலீஸ் உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வி மற்றும் தலைமை காவலர்கள் மாலதி, சந்திரசேகரன் ஆகியோர் வாகன தணிக்கை மற்றும் ரோந்து பணியில் இருந்த போது சிவகிரியில் இருந்து எல்லப்பாளையம் செல்லும் சாலையில் ஆண்டிகாடு முருகன் கோயில் அருகே வந்து கொண்டிருந்தனர். அங்கு ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக மாருதி வேனை நிறுத்திவிட்டு அருகில் அமர்ந்து இரண்டு இளைஞர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர்.
அப்பொழுது, உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வி அவர்களிடம் பொது இடத்தில் மது அருந்தக்கூடாது என்று கூறியுள்ளார். மேலும், இந்த காரின் ஆவணங்களை தணிக்கை செய்ய கேட்ட போது அந்த இரண்டு இளைஞர்களும் உதவி ஆய்வாளரை தகாத வார்த்தையால் திட்டி பிடித்து கீழே தள்ளிவிட்டு, எங்கள் மீது வழக்கு பதிவு செய்தால் கொல்லாமல் விடமாட்டோம் என கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து சப் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி கொடுத்த புகாரின் பேரில் சிவகிரி போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் சிவகிரி அருகே கொந்தாளம்புதூரை சேர்ந்த சசிகுமார் மற்றும் சிவகிரி அருகே ரங்கசமுத்திரம் என்ற ஊரை சேர்ந்த பொன்ரஞ்சித் என்பதும் தெரிய வந்தது. பின்னா் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
—ரூபி.காமராஜ்