செங்கல்பட்டு அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் கொள்ளை!

செங்கல்பட்டு புலிப்பாக்கம் புறவழிச்சாலையில் உள்ள டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு ரூ.3 ஆயிரத்து  500 மதிப்பிலான மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனா். செங்கல்பட்டு புலிப்பாக்கம் பைபாஸ் சாலையில் கடை எண் (4033-) கொண்ட அரசு…

செங்கல்பட்டு புலிப்பாக்கம் புறவழிச்சாலையில் உள்ள டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு ரூ.3 ஆயிரத்து  500 மதிப்பிலான மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனா்.

செங்கல்பட்டு புலிப்பாக்கம் பைபாஸ் சாலையில் கடை எண் (4033-) கொண்ட அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. பொதுவாக இக்கடை பகல் 12மணி முதல் இரவு 10மணி வரை இயங்குவது வழக்கம். அதனையடுத்து 10மணிக்கு மேல் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர் கணக்கு வழக்கு பார்த்து இரவு 12மணிக்கு மேல் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எப்போதும் போல் மதியம் கடையை திறந்த போது கடையின் வெளிச்சம் தென்பட்டதால் சந்தேகமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் கடையை சுற்றி பார்த்தபோது கடையின் பக்கவாட்டு சுவற்றில் துளை போட்டு 3ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது.

மேலும், திட்டமிட்டு திருடுவதை கண்டு பிடிக்க முடியாமல் போலீசாரை திணற வைக்க மதுபானக்கடை சிசிடிவி கேமராவை உடைத்தும், கடையின் ஷெட்டரை உடைக்க முயற்சித்தும் உடைக்க முடியாததால் பின்பக்கம் சென்று கடையின் சுவற்றில் துளையிட்டு மதுபாட்டில்களை கொள்ளையடித்து,  பின்னா் கடைக்கு பின்புறம் உள்ள  ரயில்வே டிராக் வழியாக தப்பித்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

—-ரூபி.காமராஜ்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.