தேவாரம் அருகே வீட்டின் மேல் பகுதியில் தேசியக்கொடி ஏற்றுவதற்காக சென்ற இரு சிறுவர்கள் மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே டி.ரெங்கநாதபுரம் தெற்கு காலனியில் மொத்தம் 11 வீடுகள் உள்ளது. அந்த காலனியில் குடியிருக்கும் கூலித்தொழிலாளர்களான ஜானகிராமன் மகன் யோக வர்ஷன் மற்றும் ஜெகதீசன் மகன் ஹரிஷ் இருவரும் தங்கள் வீட்டின் மேலே தேசியக்கொடி ஏற்றுவதற்காக தகரக் கூரையின் மீது ஏறி கட்டுக்கம்பி மூலம் தேசியக்கொடியினை கட்ட முயன்றனர்.
அப்பொழுது தாழ்வாக சென்று கொண்டிருந்த 22,000 வாட்ஸ் உயர் அழுத்த மின் கம்பம் உரசியதில் மின்சாரம் பாய்ந்து இரு சிறுவர்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கி வீசப்பட்டனர்.இதனால் பலத்த காயமடைந்த யோகேஸ்வரன் மற்றும் ஹரிஷ் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தற்போது இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தேவாரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் குடியிருப்பு பகுதியில் தாழ்வாக சென்று கொண்டிருக்கும் 20,000 வாட் உயர் அழுத்த மின்சார கோபுரத்தை உடனடியாக மாற்றித் தரும்படி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.








