டோக்கியோவில் ஒலிம்பிக் கிராமத்தில் தடகள வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தொடர் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் தொற்று பரவல் காரணமாக தள்ளிப்போனது. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லையென்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், உலகம் முழுவதும் இருந்து போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள் டோக்கியோவின் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கிராமத்தில் ஏற்கெனவே ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டு தடகள வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
டோக்கியோவில் ஏற்கெனவே அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
– நிருபன் சக்கரவர்த்தி
Twitter ID: https://twitter.com/Niruban_be








