நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 41,157 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 42,004 பேர் குணமடைந்துள்ளனர். 518 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,11,06,065 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 3,02,69,796 பேர் குணமடைந்துள்ளனர். அதே போல் மொத்த உயிரிழப்பு 4,13,609 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 4,22,660 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
https://twitter.com/MoHFW_INDIA/status/1416611443412070402
தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, மத்திய அரசின் தொகுப்பிலிருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு 41,99,68,590 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 39,42,97,344 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மாநிலங்கள் வசம் 2,56,71,246 டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன.
அதே நேரத்தில் மாநிலங்களுக்கு 15,75,140 டோஸ்கள் கூடுதலாக வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







