செய்திகள்

நடிகர் இளங்கோ குமரவேலிடம் செல்போன் பறித்த இருவர் கைது

நடிகர் இளங்கோ குமரவேலிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பொன்னியின் செல்வன்,மொழி போன்ற படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இளங்கோ குமரவேல் (57). அபியும் நானும், விக்ரம், ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். இவர் அசோக் நகர் 12வது தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த 17 ஆம் தேதி குமரவேல் திரைப்பட பணிகள் தொடர்பாக எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதிக்கு சென்றுவிட்டு, பின்னர் நள்ளிரவு வீட்டிற்கு செல்வதற்காக நடந்து வந்துள்ளார். அம்பேத்கர் மணிமண்டபம் அருகே குமரவேல் நடந்து வந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் குமரவேலிடம் இருந்து செல்போனை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர்.

செல்போன் பறிப்பு தொடர்பாக நடிகர் குமரவேல் அளித்த புகாரின் பேரில் பட்டினப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அந்த மர்ம நபர்களை தேடி வந்தனர். சிசிடிவி உதவியால் போலீசார் பிரசாத், யோவான் ஆகிய இருவர் தான் தெரியவந்தது அவர்களை தற்போது போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கலவரத்தால் சேதமடைந்த கணியாமூர் பள்ளியில் சீரமைப்பு பணிகள் தொடங்கியது

Web Editor

புதிய அரசு மகப்பேறு மருத்துவமனை; முதலமைச்சர் திறந்து வைப்பு

G SaravanaKumar

காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை ஷகிலா!

Jeba Arul Robinson