முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

’எங்ககிட்ட ஆதாரம் இருக்கு’: நடிகர் ஆர்யா வழக்கில் திடீர் திருப்பம்

நடிகர் ஆர்யா பணமோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆர்யா, சமூக வலைதளம் மூலமாக தன்னிடம் பழகி 70 லட்ச ரூபாய் மோசடி செய்த தாக ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். இதன் அடிப் படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கடந்த 10 ஆம் தேதி நடிகர் ஆர்யாவை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து கடந்த 24 ஆம் தேதி ஆர்யா போல் நடித்து ஜெர்மனி பெண்ணிடம் மோசடி யில் ஈடுபட்டதாக புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் அவரது மைத்துனர் முகமது ஹுசைனி ஆகியோரை மத்திய குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந் நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞரான ஆனந்தன் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர், முதல் தகவல் அறிக்கையில் நடிகர் ஆர்யாவை முதல் குற்றவாளியாக சேர்த்த காவல்துறை, தற்போது வரை, அவரைக் கைது செய்யாமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், ஜெர்மனி பெண்ணிடம் நடிகர் ஆர்யா வீடியோ காலில் பேசிய அனைத்து ஆதாரங்களையும் வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் கேட்டு கடிதம் எழுதி இருப்பதாகவும், நடிகர் ஆர்யா பேசிய அனைத்து மெசேஜ்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்திருப்பதாகவும் கூறினார்.

நடிகர் ஆர்யா, தனது செல்போன் எண்ணில் ஜெர்மனி பெண்ணிடம் பேசி, நட்சத்திர அந்தஸ்த்தில் தான் இருப்பதால் தனது மேலாளர் முகமது அர்மான், ஹூசைனி வங்கி கணக்கில் பணத்தை பெற்ற ஆதாரங்களும் தங்களிடம் இருப்பதாக அவர் கூறினார்.

 

Advertisement:
SHARE

Related posts

புலியை சுட்டுப்பிடிக்கும் பணி தீவிரம்

Halley karthi

அதிமுகவில் விருப்பமனு தாக்கல் செய்த அனைவருக்கும் நேற்று ஒரே நாளில் நேர்காணல்

Saravana Kumar

45 வயதுக்கு மேற்பட்டோர் வசிக்கும் பகுதிகளிலே தடுப்பூசிப் போடப்படும் – ஆணையர் பிரகாஷ்!

Gayathri Venkatesan