சாதனையாளர்களை அடையாளம் கண்டு பத்ம விருதுகளுக்கு சிபாரிசு செய்யுமாறு பொதுமக்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கலை, இலக்கியம், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த விருதுகளைப் பெறுவதற்கு தகுதியான சாதனியாளர்களை பற்றி சிபாரிசு செய்ய பொதுமக்களுக்கும் வாய்ப்பு அளிக்கப் படுகிறது.
இந் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்ம விருதுகளை மக்கள் விருதாக (People’s Padma) மாற்ற மத்திய அரசு உறுதி கொண்டிருக்கிறது. பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரிடையே, தகுதி யான சாதனையாளர்களையும், சமூகத்துக்கு சேவை செய்பவர்களையும் பொதுமக்கள் அடையாளம் கண்டு பத்ம விருது வழங்க சிபாரிசு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விருதுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே சிபாரிசுகளை தாக்கல் செய்ய வேண்டும். சிபாரிசுகளை தாக்கல் செய்ய 15 ஆம் தேதி கடைசிநாள் என்றும் சாதனை, சேவை குறித்து 800 வார்த்தைகளுக்கு மிகாமல் விவரம் எழுத வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.







