தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக ஆட்சியமைக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளதால் தவெக ஆதரவு எம்.எல்.ஏஎக்களின் பலம் 113 ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து தமிழ் நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்த தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமைக் கோரினார். ஆனால் ஆட்சியாமைக்க தேவையான பெரும்பான்மை தவெகவிற்கு இல்லை என்று ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு தவெக நிர்வாகி நிர்மல் குமார் நேரில் சென்றார். அப்போது அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகத்துடன் பேசிய நிர்மல் குமார் ஆதரவு வழங்குவது குறித்து பேசியுள்ளார்.







